29.6.18

டிஜிட்டல் ஜர்னலிஸ்ட்டா நீங்க...?

இணைய ஊடகத்தில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் தங்கள் தகுதிகளை வளர்த்து கொள்கிறார்களா..?
நாள்தோறும் புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வருகின்றன. ஊடக துறையில் இந்த மாற்றங்களை, புதிய வரவுகளை வரவேற்க யார் தயாராக இருக்கிறார்கள்? தமிழ் ஊடகங்கள் இதனை பற்றிகொள்கின்றனவா..?

இந்த கேள்விகளை நான் எனக்கே கேட்க வேண்டியதும் கூட.

இணையம் என்ற ஒன்று இன்று நம் வாழ்வில் பின்னிப்பிணைந்தவையாக மாறிவிட்டது.

தேர்வு எழுதினால், முடிவுகளை அறிய இணையம் பயன்படும் என்று எண்ணி இருந்த தலைமுறைகள்தான் இன்று இணைய ஊடகங்களில் சூப்பர் சீனியர்கள். இணையத்தில் ஃபேஸ்புக்கை அதன் பிறப்பில் இருந்தே பற்றிக்கொண்டு வருபவர்கள் சீனியர்கள்.

சூப்பர் சீனியர்களுக்கும், சீனியர்களுக்கும் உள்ள இடைவெளி ஒற்றைபடை எண் அளவு தான் என்றாலும், 90களின் இறுதியில் பிறந்தவர்கள் தான் இன்று இணையத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்கள். இவர்களை நம்பிதான் கிட்டத்தட்ட இணைய ஊடகங்கள் பிழைப்பை நடத்துகின்றன. நடத்திதான் ஆக வேண்டும்.

இணைய ஊடகங்களை பல்வேறு வயதுடையவர்கள் பயன்படுத்தினாலும், இளைய தலைமுறை தான் அதிகம் என்பதால், அவர்களுக்கு அதிகம் தீனி போட வேண்டியுள்ளது. அதற்கான சரக்குகளை தான் இணைய ஊடகங்கள் வழங்க வேண்டியுள்ளது.

அன்றாட செய்தி, அதன் தாக்கம், வாதம், விவாதம் என ட்ரெடிஷனல் மீடியாவுக்கான அத்தனையையும் இணைய ஊடகம் பெற்றிருந்தாலும், கட்டற்ற சுதந்திரத்தால் இணைய ஊடகங்கள் ஒரு படி முன்னே நிற்கின்றன.

பாரம்பரிய செய்தி ஊடகம், இணைய செய்தி ஊடகம், இவையிரண்டும் கலந்த செய்தி ஊடகம் என செய்தி ஊடகங்களை பிரித்து  கொள்வோம்.
இதில் முதல் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் வேறுபட்டது. பின் இரண்டு ஊடகங்கள் தான் இன்று வேகமாக வளர்ந்து வரும் செய்தி நிறுவனங்களாக இருக்கின்றன.

நான் இங்கு ’ஊடகத்தில் எழுதும் முறை’ பற்றி சொல்ல வரவில்லை. இணைய ஊடகத்தினருக்கான திறன்மேம்பாடு குறித்து தான் பேசப்போகிறேன்.

இணைய ஊடகத்தில் பணியாற்றுவோருக்கான 23 திறன்களை (டிஜிட்டல் ஸ்கில்ஸ்) சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான மையம் வகைப்படுத்தியுள்ளது. இதில் 5 திறன்களை மட்டுமே பெரும்பாலான இணைய ஊடகங்களில் பயன்படுத்தப்படுவதாக அந்த மையம் நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது.

ஆக. முதலில் திறன்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல, சிறப்பு செய்தியாளர், மூத்த பத்திரிகையாளர், சீனியர் சப் எடிட்டர்,  அது இது என்று வெற்று பதவிகளை ஓரமாக வைத்துவிடுங்கள். டிஜிட்டல் ஸ்கில்ஸ் இல்லை என்றால் நீங்கள் ஒருபோதும் டிஜிட்டல் உலகிற்கு தகுதியாக மாட்டீர்கள்.

செய்தியாக்குதல், அதனை சமூக ஊடகங்களில் பதிவிடுதல் என இவையிரண்டு மட்டுமே இணைய ஊடகங்களின் பணியல்ல. இவையிரண்டுக்கும் இடையில் செய்ய வேண்டியது நிறைய இருக்கின்றன. அதற்காக தான் இணைய ஜாம்பாவான்களான கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியன திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கின்றன.

அந்த பயிற்சிகளை இங்கு, இங்கு, இங்கு சென்று படித்து பெறுங்கள்.

(இன்னும் தொடரும்..)

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...